Spotlightசினிமா

வெளிநாடு பயணம், பள்ளி திறப்பு, ’தளபதி 64’; விஜய்யின் அடுத்த ப்ளான்!

 

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ வரும் தீபாவளி தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. விரைவில், இதன் இசை வெளியீட்டு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்தையும் அறிவித்துவிட்டார். ‘தளபதி 64’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் பூஜையுடன் துவங்கப்படவிருக்கிறது. இதற்கிடையில், விஜய் வெளிநாடு சென்று சில நாட்கள் ஓய்வெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னையில் அவர் கட்டிவரும் பள்ளியின் வேலைகளையுல் விரைந்து முடிக்கவும் கட்டளையிட்டுள்ளாராம். அடுத்த வருட ஆரம்பத்தில் இக்கட்டிடத்தின் திறப்பு விழா இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button