
சமீப நாட்களாக நடிகர் விமல் தனது போட்டியாளர்களாக சிவகார்த்திகேயனையும் விஜய்சேதுபதியையும் கருதுவதாகவும் அவர்களை முந்துவதற்காக சபதம் எடுத்து இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இதுபற்றி விமலிடம் கேட்டதற்கு ‘கூத்துப்பட்டறையில் இருந்தபோதே விஜய்சேதுபதி எனக்கு பழக்கம். சிவகார்த்திகேயன் டிவி தொகுப்பாளராக இருந்தபோதில் இருந்தே நண்பர்.
ஒரே ஊர் வேறு. சூரி எங்கள் எல்லோருக்கும் நெருக்கம். நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி இருக்கிறோம். சமீபத்தில் நடந்த சூரி வீட்டு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி படப்பிடிப்பு காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை. மற்ற எல்லோரும் கலந்துகொண்டோம்.
இந்த சூழல்ல இப்படி ஒரு தப்பான செய்தி வந்து இருக்கிறது. நான் மன்னர் வகையறா படத்தை தயாரித்தபோது வெளியிடும் நேரத்தில் பெரிய பிரச்சினையில் சிக்கினேன். அப்போது இந்த 3 பேருமே ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார்கள். நான் தவிர்த்தும் விடாம் உரிமையோடு கொடுத்தார்கள். இந்த மனது யாருக்கு வரும்?’ என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார்.