Spotlightவிமர்சனங்கள்

தக் லைஃப் – விமர்சனம் 3.5/5

நாயகன் திரைப்படத்தைத் தொடர்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்திருக்கிறது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டனி.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தாதாக்களாக வரும் கமல்ஹாசன் மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் இருவருக்குமிடையே பெரிய வார் நடக்க, இதில் கமல்ஹாசன் தப்புகிறார். அப்போது நடந்த சண்டையில் அப்பாவையும் தங்கையையும் இழந்துவிடுகிறார் சிறுவயது சிம்பு.

டெல்லிக்கு பயணமாகிறார்கள். வருடங்கள் உருண்டோட அங்கு ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறார்கள் கமல்ஹாசன் & டீம். கமல்ஹாசனுக்கு வலது கையாக உயர்ந்து நிற்கிறார் சிலம்பரசன்.

இந்நிலையில், நாசரின் மகள் மரணத்திற்கு காரணமாக இருந்தவரை கொலை செய்கிறார் கமல்ஹாசன். அதற்காக சிறை செல்கிறார் கமல்ஹாசன்.

வெளியே வரும் வரை பொறுப்பை பார்த்துக் கொள்ளுமாறு சிலம்பரசனிடம் அனைத்தையும் ஒப்படைக்கிறார் கமல்ஹாசன்.

சிறையில் இருந்து வெளியே வரும் கமல், சிலம்பரசனின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல், கமல்ஹாசனை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார் சிலம்பரசன்.

சிலம்பரசனின் சதித் திட்டத்தில் இருந்து கமல்ஹாசன் தப்பித்தாரா.? அவரது குடும்பம் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

வழக்கம் போல், ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்தும் தூணாக வந்து நிற்கிறார் கமல்ஹாசன். காதலியாக த்ரிஷா மனைவியாக அபிராமி இருவரிடம் காட்டும் அன்பில் உயர்ந்து நிற்கிறார். தொடர்ந்து தனது கண்களாலே நடிப்பின் அதிசயத்தை படம் பார்ப்பவர்களுக்குக் காட்டுகிறார்.

கமல்ஹாசனுக்கு இணையாக சிலம்பரசனுக்கும் சரிசமமான காட்சிகள் கொடுக்கப்பட்டு, அவருக்கான முக்கியத்துவத்தை நன்றாகவே கொடுத்திருக்கிறார். தனது ரசிகர்களை எந்த இடத்திலும் ஏமாற வைக்காமல், தரமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சிலம்பரசன்.

அழகில் த்ரிஷாவும், அடக்கமாக இருப்பதில் அபிராமியும் தனது நடிப்பிற்கு நன்றாகவே பலம் சேர்த்திருக்கிறார்கள். அசோக் செல்வன் தனது வேலையை சரியாக செய்தாலும், படத்தில் இவரது கதாபாத்திரம் என்பது பெரிதான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது பெரும் ஏமாற்றம் தான்.

ஐஸ்வர்யா லெக்‌ஷ்மிக்கு குறைவான காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நிறைவாகத் தான் கொடுத்திருக்கிறார். இவருக்கு சற்று கூடுதல் காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

நாசர், சின்னி ஜெயந்த், ஜோஜூ ஜார்ஜ், பக்ஸ், வையாபுரி, வடிவுக்கரசி, சஞ்சனா உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்கள்.

வழக்கமான கேங்க்ஸ்டர் படமாக இப்படம் இருந்ததில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை படம் பார்ப்பவர்கள் எளிதில் யூகிக்கும்படியான ஒரு திரைக்கதை அமைத்தது பலவீனம் தான்.

ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் இனிமை தான். முத்தமழை பாடல் இல்லாதது ஏமாற்றமே.. பின்னணி இசையில் ஓரிரு இடங்களில் மட்டுமே ரசிக்க வைத்திருக்கிறார்.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு மிகப்பெரும் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் மிரள வைத்திருக்கிறது.

கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரின் நடிப்பு மிரட்டலைக் காண்பதற்காகவே தக் லைஃப் படத்தினை நிச்சயம் பார்க்கலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button