
இயக்கம்: KARTHIKEYAN MANI
நடிகர்கள்: KAALI VENKAT,SATHYARAJ, ROSHINI HARIPRIYAN, SHELLY KISHORE , VISHVA, GEORGE MARYAN, ARCHANA CHANDHOKE, SUNIL SUKHADA, CHAAMS, JANGIRI MADHUMITHA
ஒளிப்பதிவு: ANAND G.K.
இசை: K.C. BALASARANGAN
தயாரிப்பு: MADRAS MOTION PICTURES
கதைப்படி,
கதையாசிரியரான சத்யராஜ், ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை கதையாக எழுத முயற்சிக்கிறார். அதற்காக காளி வெங்கட்டை டாஸ்மாக் பாரில் சந்திக்கிறார்.
அவரது வாழ்க்கை பயணமாகிறது.
சென்னையில், ஆட்டோ ஓட்டிக் கொண்டு எளிமையான வாழ்க்கையில் தனது குடும்பத்தை கவனித்து வருபவர் காளி வெங்கட். இவருக்கு மனைவியாக ஷெல்லி கிஷோர், மகளாக ரோஷ்னி மற்றும் மகனாக விஷ்வாவாக வருகின்றனர்.
மகள் நன்றாக படித்து பெங்களூருவில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் 12 ஆம் வகுப்பில் நல்லதொரு மதிப்பெண் எடுத்து இன்ஞ்சினியரீங் படிப்பில் சேர தயாராகி வருகிறார்.
தனது மகளுக்கு வரன் பார்த்து வருகிறார் காளி வெங்கட். ஆனால், அவருக்கு எந்தவொரு வரணும் சிக்காமல் தொடர்ந்து தள்ளிக் கொண்டே செல்கிறது. தன்னுடைய குடும்ப கஷ்டத்தை மகள் மீது வைத்ததால் தான் இப்படி தனது மகள் தவிக்கிறாள் என்று நினைத்து கவலை படுகிறார் காளி வெங்கட்.
தனது அப்பா எல்லோரிடமும் மிகவும் தாழ்ந்து பேசுவதையும் நடந்து கொள்வதையும் பிடிக்காத விஷ்வா, அப்பா மீது ஒருமாதிரியான கோபத்தில் இருந்து வருகிறார்.
என்ன நடந்தாலும், தன் குடும்பத்தை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவாக ஷெல்லியும் இருக்க..
இவர்களின் குடும்பத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதை இயல்பு மாறாமல் கூறியிருக்கும் படம் தான் இந்த “மெட்ராஸ் மேட்னி”.

மிகவும் இயல்பான எதார்த்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, அக்கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் காளி வெங்கட். கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்.
இப்படியொரு கதாபாத்திரத்தில், இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் காளி வெங்கட். தனது மனைவியைப் பற்றிப் பேசியதும் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற காட்சி, தனது குடும்பத்திடம் குடித்துவிட்டு வந்து பேசும் காட்சி, தனது மகளுடன் போனில் பேசும் காட்சி, என பல இடங்களில் ”“ப்ப்ப்ப்பா……” என்னாமா நடிக்கிறாருய்யா இந்த ஆளு” என வியக்கும் மாதிரியான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் காளி வெங்கட்.
நடிகை ரோஷ்னி, தனது குடும்பத்தையும் தனது நிலையையும் நினைத்து கண்கலங்கும் காட்சியில் நம்மையும் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார்.
மகனாக நடித்திருக்கும் விஷ்வா, நாய் மீது வைத்திருக்கும் பாசம், அப்பாவை புரிந்து கொள்ளும் தருணம் என பல இடங்களில் தனது இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அம்மாவாக நடித்திருக்கும் ஷெல்லியும் தன் பங்கினை சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.
காளி வெங்கட்டின் நண்பராக வருபவர், கட்சிக்காரராக வரும் கீதாகைலாசம், விஜய் டிவி ராமர், லோக்கல் ரவுடி, ஊறுகாய் விற்கும் சாம்ஸ், HR ஆக வரும் அர்ச்சனா, ட்ரைவிங் கற்றுத் தரும் ஜார்ஜ் மரியன், EB அலுவலர் என அனைவருமே தங்களது கேரக்டர்களை மிகவும் சரியாக செய்திருக்கின்றனர்.

சத்யராஜின் கதாபாத்திரமானது கதைக்குள் சற்று இடைஞ்சலாகவே பார்க்க முடிகிறது. காளி வெங்கட் மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் அவரது வாழ்வியல் என இவற்றை மட்டுமே காட்டியிருக்கலாமே இயக்குனரே.
இதனாலே, முதல் பாதியில் கதை சற்று மெதுவாக நகர்ந்து நம்மை சற்று சோதித்துவிட்டது. இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்ததற்காக இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.
ஒரு எளியவனின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவனது குடும்பத்தை இயல்பு மாறாமல் எடுத்து அனைவருக்குமே தங்களின் குடும்பத்தின் மீது இன்னும் அளவு கடந்த அன்பை கொடுக்க வைப்பதற்கு இப்படம் ஒரு பூஸ்ட் தான்.
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது. ஒளிப்பதிவு நம்மை கதையின் உலகத்திற்குள் கூட்டிச் சென்றிருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஷார்ப்பாக தனது வேலையை செய்து முடித்திருக்கிறார்.
இந்த படத்தோட பெரிய மைனஸ் என்று கேட்டால், அது சத்யராஜ் கேரக்டர் மட்டுமே… சீரியஸாக சென்று கொண்டிருக்கும் கதையில், அவ்வப்போது உள்ளே உள்ளே எண்ட்ரீ கொடுத்து காமெடியாக பேசுகிறேன் என்று அவர் கூறும் வசனங்கள் எதுவுமே படத்தின் ஓட்டத்திற்கு துளியளவும் கைகொடுக்கவில்லை.
அவரது காட்சிகளை ஒட்டுமொத்தமாகவே படத்திலிருந்து தூக்கிவிட்டாலும் நலம் தான். படத்தின் உயிர்நாடியை நம்மால் உணர்ந்து கொள்ளாமல் போய்விட முடிகிறது.
முதல் பாதியின் வேகத்தையும் சற்று கவனித்திருந்திருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சியிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
மெட்ராஸ் மேட்னி – தந்தையின் பாசம்…





