தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு வந்தன.
இதனால் தமிழ் மொழி மட்டும் தெரிந்த பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், இனி முன்பு பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளில் உள்ள பயண விவரங்கள் தமிழ் மற்றும் மலையாள மொழிகளும் இடம் பெறும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
முதலில், சென்னை சென்ரல், திருச்சி, சேலம், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே இது அமலுக்கு வந்துள்ளது. விரையில் மற்ற ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும் எனவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இதனால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
Facebook Comments