வேலுர்: வேலூர் கோட்டையில், பீர் குடித்து, ஆட்டம் போட்ட, கல்லுாரிமாணவியரின் வீடியோ, வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் பல்வேறு கல்லுாரிகளில் படிக்கும், 12 மாணவியர், வேலுார் கோட்டையைச் சுற்றிப் பார்க்க நேற்று முன்தினம் வந்தனர்.
கோட்டை மதில் சுவர், சுற்று பாதைக்கு சென்ற, நான்கு மாணவியர், தாங்கள் எடுத்து வந்த, பீர் பாட்டிலை எடுத்து குடித்தனர்.சிறிது நேரத்தில், போதை தலைக்கேற, ஆட்டம் போட்டனர். இதை, சக மாணவி ஒருவர், வீடியோ எடுத்துள்ளார்.சுற்றுலா முடித்து, சென்னை திரும்பிய நிலையில், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்பில், ஒரு மாணவி வீடியோவை வெளியிட்டார். சில நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ, வேகமாக பரவுகிறது.
Facebook Comments