Spotlightவிமர்சனங்கள்

மதறாஸ் மாஃபியா கம்பெனி – விமர்சனம் 3/5

இயக்கம் : ஏ.எஸ்.முகுந்தன்

நடிகர் & நடிகைகள்: Anandraj ,Samyuktha , Deepa , Sasilaya , Munishkanth , Raams , Aradhya ,

ஒளிப்பதிவு : அசோக்ராஜ்

இசை : ஸ்ரீகாந்த் தேவா

தயாரிப்பு : அண்ணா புரடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர்: V. Suganthi Annadurai

பல வருடங்களாக மதறாஸ் மாஃபியா கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஆனந்தராஜ். பல ரெளடிகளை தேர்ந்தெடுத்து கொலை, கடத்தல் தொழிலை இதன் வாயிலாக நடத்தி வருகிறார் ஆனந்த்ராஜ்.

அதுமட்டுமல்லாமல், எந்த வழக்கிலும் சிக்காத வண்ணம் இந்த குற்றச் செயல்களை செய்து வருகிறது ஆனந்த்ராஜ் டீம்.

தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யமுடியாமல் திணறுகிறது தமிழ்நாடு காவல்துறை. இவரை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்றெண்ணிய காவல்துறை, அதற்காக ஸ்பெஷல் அதிகாரியாக சம்யூக்தாவை வரவைக்கிறார்கள்.

ஆனந்த்ராஜை எப்படியாவது குற்றவாளியாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை பின் தொடர்கிறார் சம்யூக்தா. இறுதியில் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக் கதை.

ஹீரோவாகவும் வில்லனாகவும் வந்து படம் முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டார் ஆனந்த்ராஜ். தனது நடிப்பில் தனது அனுபவத்தை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் கொடுத்த அதே வில்லத்தனத்தை கொடுத்துவிட்டு, அதேசமயம் காமெடியிலும் தனது நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார்.

மிடுக்கென தனது போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சம்யூக்தா. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகர்ந்ததுக்கு இவரது நடிப்பும் மிகப்பெரும் பலம் தான்.

மனைவியாக தீபா துணைவியாக சசிலயா இருவருமே ஆங்காங்கே கலகலக்க வைத்திருக்கிறார்கள்.

மதறாஸ் மாஃபியா கம்பெனிக்குள் நுழைவதற்கு முனிஸ்காந்த் செய்யும் அல்ட்ராசிட்டி சிரிப்பை வரவைத்திருக்கிறது.

திரைக்கதையை படுவேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸில் வைத்திருந்த ட்விஸ்ட் படத்திற்கு சற்று பலம்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

மதறாஸ் மாஃபியா கம்பெனி – சிரிப்பும் சண்டையும் கலந்த கலவை..

Facebook Comments

Related Articles

Back to top button