Spotlightசினிமா

பல நட்சத்திரங்கள் முன்னிலையில் நடைபெற்ற சங்கத்தமிழன் இசை வெளியீட்டு விழா!

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘சங்கத்தமிழன்’. இயக்குனர் விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது . இந்த விழாவில் சங்கத்தமிழன் படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி , இயக்குனர் விஜய்சந்தர் , ராஷி கண்ணா ,நிவேதா பெத்துராஜ் , இசையமைப்பாளர்கள் விவேக் சிவா , மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன் ,ஜான் விஜய் , அகல்யா வெங்கடேசன் , பாடலாசிரியர் விவேகா , நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன் ,குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

Facebook Comments

Related Articles

Back to top button