
ரஜினி நடிக்க சிவா இயக்க விரைவில் உருவாக இருக்கிறது ‘தலைவர் 168’. இப்படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
சில வருடங்களுக்கு முன் வரிசையாக பல உட்ச நட்சத்திரங்களை தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதன் பிறகு சிறிதாக இடைவெளி எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், மீண்டும் சர்கார், பேட்ட, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை மற்றும் ரஜினிகாந்தின் அடுத்த படம் என படத்தயாரிப்பு பணியில் இணைத்துக் கொண்டது.
சன் பிக்சர்ஸின் அடுத்த படமாக தனுஷ் நடிக்கும் 44வது படத்தை தயாரிக்க இருப்பதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் மேலும் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments





