
தெலுங்கு திரையுலகில் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு, இந்தாண்டு ரொம்பவே துயரமாக அமைந்துள்ளது. மகேஷ் பாபுவின் அண்ணன் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தனது வலது கரமாக இருந்த அண்ணன் உயிரிழந்ததில் இருந்தே மகேஷ் பாபு சோகத்தில் இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவியும் செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
இப்போது மகேஷ் பாபுவின் தந்தையும் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகருமான கிருஷ்ணாவும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனால் தெலுங்கு திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதனையடுத்து கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Facebook Comments