விமர்சனங்கள்

வெஞ்சன்ஸ் – விமர்சனம் 2.25/5

ராகுல் அசோக் அவர்களின் இயக்கத்தில் ஏசி புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அபர்னதி, இளவரசு, ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய் ஜி மகேந்திரன், காளி வெங்கட், சரவணா சுப்பையா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வெஞ்சன்ஸ்

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எம் எஸ் பிரபு. படத்தொகுப்பு செய்திருக்கிறார் இம்ரான். பின்னணி இசை அருண் ராஜ் கொடுத்திருக்கிறார்.

கதைக்குள் சென்று வரலாம்…

பள்ளியில் படிக்கும் வேணி தனது பெயரை கூட சக தோழிகள் அறிந்திருக்கவில்லை என்று நினைத்து கவலைப்படுகிறார். தந்தையாக வரும் காளி வெங்கட் படித்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தால் உன்னை மாநிலமே கொண்டாடும் என்று கூறுகிறார். அயராது படித்து மாநிலத்திலும் முதல் மதிப்பெண் எடுக்கிறார்.

மாநிலம் முழுவதும் வேணியின் பெயர் ஒலிக்கிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு அனைவரும் மறந்து அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தவுடன் வேணியால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அனைவரும் தன்னை பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார். தொடர்ச்சியாக படித்து படித்து 12-ம் வகுப்பில் முதலிடம், ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் என்று கலெக்டராகவும் ஆகிறார்.

தொடர்ச்சியாக நல்ல காரியங்களை செய்து அதிரடியில் இறங்கி தினசரி தனது பெயரை பத்திரிகைகளில் வரும்படியாக பார்த்துக் கொள்கிறார் வேணி.

இப்படியான சம்பவத்தை தொடர்ச்சியாக வேணி செய்து கொண்டிருக்க, ஆளுங்கட்சியால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார். மத்தியில் இருக்கும் அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு களம் இறங்குகிறது.

தனது மேல் விழுந்த குற்றச்சாட்டை வேணி எப்படி எதிர்கொண்டார்.? மத்திய அரசு மாநில அரசு மோதலை அபர்ணதி எப்படி கையாண்டார்.? என்பதே படத்தின் மீதி கதை

2040 ஆம் ஆண்டு நடக்கும்படியாக கதை நகர்த்தப்படுகிறது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தாய்நாடு என்று வைப்பதும் தஞ்சாவூர் என்பதற்கு பதிலாக காவேரி மாவட்டம் என்று வைப்பதும் இயக்குனரின் திறமை. நிகழ்கால அரசியல்வாதிகளின் கதாபாத்திரங்களை கொண்டு இந்த ஒட்டுமொத்த படத்தையும் இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

மறைந்த தலைவர்கள் வாழ்கின்ற தலைவர்கள் என அனைவரையும் கண் முன்னே கொண்டு வந்து விட்டார் இயக்குனர். ஒரு மாவட்ட ஆட்சியருக்கு என்ன மாதிரியான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது அதனை எவ்வாறு கையாளலாம் என்பதை எல்லாம் தாண்டி தான் நினைத்ததை எல்லாம் செய்யலாம் என்று ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதனை உலவவிட்டிருக்கிறார்.

கலெக்டரின் முதல் பணியே சட்டத்தை நம் கையில் எடுக்கக் கூடாது என்பதும், உயரதிகாரிகளுக்கு எப்படியான அணுகுமுறை கொடுக்க வேண்டும் என்பதும் தான். அதனை விடுத்து முழுக்க முழுக்க படம் சினிமாத்தனமாகவே நகர்வது பெரும் கோபத்தைத் தான் வரவைத்துவிடுகிறது.,

தொடர்ச்சியாக ஸ்லோ மோஷனின் நடந்து வருவது மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார் அபர்ணதி. ஒரு சில காட்சிகள் இருந்தால் பரவாயில்லை ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஸ்லோமோஷனல் நடந்து கொண்டே இருப்பது படம் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை வரவைத்து விட்டது.

அதற்கு ஏற்றார் போல் பின்னணி செயலும் மாஸான இசையை கொடுத்து மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர். ஓவர் ஆக்டிங் ஜான் விஜய், இளவரசு, ஒய் ஜி மகேந்திரன் என அனைவரும் தங்கள் கொடுக்கப்பட்டதை செய்து முடித்திருக்கிறார்கள்.

பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பெரிய காட்சிகளாக எடுக்க வேண்டிய சீன்களை சின்ன சின்ன காட்சிகளாக வைத்து பெரிதாக காட்ட முயற்சித்து இருக்கிறார்கள். அதற்கு பெரிதாக பலனும் கிடைக்கவில்லை. கற்பனைக்கு அப்பாற்பட்டு அனைத்தும் படத்தில் அரங்கேறுவதால், பெரிதாக படத்திற்குள் செல்லமுடியவில்லை.

இசையும் ஒளிப்பதிவும் ஓகே ரகம் தான்.

வெஞ்சன்ஸ் – கற்பனை

Facebook Comments

Related Articles

Back to top button