விமர்சனங்கள்

கொலைச்சேவல் – விமர்சனம் 2/5

துதிவானன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் :கொலை சேவல்”. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பிஜி முத்தையா. இசையமைத்திருக்கிறார் சாந்தன். படத்தொகுப்பு செய்திருக்கிறார் அஜய் மனோஜ். ஆர்பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி பாலா மற்றும் கௌசல்யா பாலா இருவரும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்

கதைப்படி

இரு வேறு சமூகத்தைச் சார்ந்த கலையரசன் மற்றும் தீபா பாலு. காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். தீபா பாலு தனது பெற்றோரை எதிர்த்து கலையரசனை திருமணம் செய்திருக்கிறார். நிறைமாத திருப்பனியாக கலையரசனின் கிராமத்திற்கு வருகிறார் தீபா பாலு.

கர்ப்பினியாக இருக்கும் தீபா பாலுவை தனது குலதெய்வ கோயிலுக்கு படையிட படையலிட அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது கலையரசன் குடும்பம். கலையரசனின் அக்கா, மாமா, அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு செல்ல தயாராகின்றனர்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்று விடுகின்றனர். கலையரசனும் தீபா பாலும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் நடுவே அமைந்திருக்கும் அந்த கோவிலுக்குள் அனைவரும் சென்று விடுகின்றனர்.

சென்ற பின்பு அந்த இடத்தில் ஒரு மிகப்பெரும் சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது. அது என்ன சம்பவம் எதற்காக அந்த சம்பவம் நடந்தது என்பதை எல்லாம் இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸில் விடையாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து இடைவெளி வரை எங்கும் செல்லாமல் கதை ஒரே இடத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் பாதிக்கு மேல் தான் கதையின் சாராம்சம் என்னவென்று படம் பார்ப்பவர்களிடம் எடுத்துக் கூற வருகிறார் இயக்குனர்.

ஒரு உண்மை சம்பவத்தை கூற வருகிறோம் என்றால் அதில் இருக்கும் உயிர், உயிரோட்டம் என அனைத்தையும் எடுத்து வைப்பது ஒரு இயக்குனர் திறமை தான் இருந்தாலும் எதைக் கூற வேண்டும் எதைக் கூறக்கூடாது என்பதையும் இயக்குனர் புரிந்து கொண்டு அதை படைப்பாக கொடுப்பது தான் இயக்குனரின் அழகு.

கிளைமாக்ஸில் வரும் காட்சி யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை இயக்குனர் இப்படி ஒரு உண்மை சம்பவம் நடந்திருக்கிறது அதைத்தான் எடுத்து கூறினேன் என்றும் அதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறார்.

இருந்தாலும் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் இது நடக்காமல் எப்படி இருக்கலாம் எப்படி கொண்டு செல்லலாம் சமூகத்தை எப்படி கொண்டு சமூகத்தை எப்படி கொண்டு செல்லலாம் என்ற கோணத்தில் படத்தை இயக்கியிருந்தால் இயக்குனரை வெகுவாக பாராட்டலாம். ஆனால் அதை கூறாமல் இப்படி நடந்து இருக்கிறது இன்னமும் இது இப்படித்தான் இருக்கும் என்று பொதுச் சமூகத்தில் ஒரு வன்முறை தூண்டும் படைப்பாக தான் இந்த படைப்பை கொடுத்திருக்கிறார்.

ஆணவ கொலையை மையப்படுத்தி படைப்பைக் கொடுக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார்.

ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்துவிட்டது, அதனால் அந்த பெண்ணை சாமியாக வைத்து வழிபடுகிறோம் என்று கூறிவிட்டு, அந்த சாமியை கும்பிட வரும் பெண்ணுக்கும் அதே கொடுமை நடக்கிறது என்றால் எதற்காக அந்த சாமியை கும்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வியால் ஒட்டுமொத்த படமும் ஒரு இடத்தில் நின்றே விடுகிறது.

இப்படியான சினிமா என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விட, என்ன மாதிரியான மனநிலைக்கு மாற்றி விடும் என்பதை நினைத்து தான் அச்சம் ஏற்படுகிறது.

தீபா பாலுவின் அழகும் நடிப்பும் பலம்.. கலையரசனின் நடிப்பையும் ஈடுபாட்டையும் நிச்சயம் பாராட்டலாம்.. ஆனால், இருவரின் கதைத் தேர்வை மட்டும் சற்று சிந்தித்திருக்கலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button