
குரங்கு பொம்மை என்ற படத்தினை கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நித்திலன்.
இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா என்ற படத்தை தற்போது இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு இது 50வது படமாகும்.
இதன் முதல் பார்வை நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. வயதான லுக்’கில், கையில் பட்டா கத்தியுடனும், ரத்தம் சொட்ட சொட்ட, சலூன் கடையில் சேர் ஒன்றில் ஒரு காலை தூக்கி அமர்ந்திருக்கும்படியாக அந்த லுக் அமைந்திருந்தது.
இந்த போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில், அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, சிங்கம்புலி என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனால், படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முதல் பார்வைக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.