
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திர என்ற ஒரு பொருளுக்கு உயிர் கொடுத்தவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் இவருக்கென்ற ஒரு பெரும் இடம் எப்போதுமே இருந்து வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் நடிகர் வடிவேலு. அப்போது, அதிமுக-விடம் கூட்டணியாக இணைந்திருந்தது விஜயகாந்தின் தேமுதிக.
பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து அனைவரது எரிச்சலையும் பெற்றுக் கொண்டார் நடிகர் வடிவேலு.
அந்த ஆண்டு திமுக படுதோல்வியை சந்தித்தது. அதில் இருந்து வடிவேலுவின் சினிமா பயணத்திலும் ஒரு பெரும் பள்ளம் விழுந்தது. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் வடிவேலுக்கு ரெட் பிறப்பிக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன் விஜயகாந்தை நேரில் சந்தித்து கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்குப் பின்னர் விஜயகாந்தை நேரில் சந்தித்து தனது தன்னை மன்னித்து விடும்படி வடிவேலு கூறியிருக்கிறார்.