Spotlightசினிமா

CS அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் “”ரத்தம்”!

விஜய் ஆண்டனி, நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரத்தம் என்ற தலைப்பில் இயக்குநர் CS அமுதனுடன் (தமிழ்ப்படம் புகழ்) கைகோர்த்திருக்கிறார். இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

“ரத்தம்” படம் ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன், எடிட்டிங் சுரேஷ், சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.

Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப், பங்கஜ் போரா & S.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரத்தம்” படத்தின் 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022 கோடை கால வெளியீடாக இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button