
சிறுத்தை சிவா இயக்க அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம்தான் ‘விஸ்வாசம்’. படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, ரவி அவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் ஒரு அஜித்தின் கேரக்டர் பெயர் ”தூக்கு துரை” என்று தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





