
அஜித், நயன்தாரா நடிக்க சிவா இயக்கத்தில் உருவாகி வெளியானது ‘விஸ்வாசம்’. பொங்கல் தின கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது.
ரசிகர்களின் ஆரவாரத்தால் மிகப்பெரும் வெற்றியடைந்த இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் 50-வது நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட எண்ணிய பாண்டிச்சேரி அஜித் ரசிகர்கள் ‘பாண்டிச்சேரி ரத்னா’ திரையரங்கில் வரும் 28 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கொண்டாட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
திரளான அஜித் ரசிகர்கள் இதில் கலந்து கொள்ளுங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Facebook Comments





