சினிமா

”எங்களுக்கும் குடும்பங்கள் உண்டு”…. தமிழ் நடிகையின் கதறல்!!

எங்களுக்கும் குடும்பங்கள் உண்டு, எங்களை காயப்படுத்தாதீர்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டை சொந்த மாநிலமாக கொண்ட இவருக்கு, கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார்.

” கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.

ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன்.ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு.

இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது.இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்று கொள்வதை தவிர வேறு வழி இல்லை”என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button