
இயக்கம்: சிவராமன்
நடிகர்கள்: விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா
இசை: செளரப் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம்: Foot Steps Production
ஒளிப்பதிவு: டி எஸ் பிரசன்னா
படத்தொகுப்பு: தினேஷ்
நீதிபதியாக வரும் சோனியா அகர்வால், பல வழக்குகளை விசாரித்து வருகிறார். அதில், ஒன்று தான் சொத்து வழக்கு . பெண் ஒருவர் இறந்து போன ஒருவரின் பங்களா வீட்டை தன்னோடதுதான் என்றும், இறந்து போன நபர் உயிலில் எழுதி வைத்த பெண் நான் தான் என்று கூற, சந்தேகம் எழுகிறது சோனியா அகர்வால்க்கு.
இந்த வழக்கை விசாரிக்க சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்தை வரவைக்கிறார் சோனியா அகர்வால். விசாரணையில், சொத்திற்காக போலியாக கொண்டுவரப்பட்ட பெண் என்று கண்டுபிடிக்கிறார் விக்ராந்த்.
உண்மையான உயிலுக்கு சொந்தமான பெண்ணான அலேக்யாவை தேடி கண்டுபிடிக்கிறார் விக்ராந்த்.
அந்த உயிலுக்கும் அலேக்யாவுக்கும் என்ன சம்மந்தம்.? அலேக்யாவின் பின்புலம் என்ன.?? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை இருக்கிறது இரண்டாம் பாதியில்..
நீதிபதி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சோனியா அகர்வால். வசன உச்சரிப்பு, நடை, என நடிப்பில் நன்றாகவே தன்னை மெருகேற்றி காட்டியிருக்கிறார் சோனியா அகர்வால்.
சப் இன்ஸ்பெக்டராக துடிப்பான ஒருவராக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருந்தார் விக்ராந்த்.
படத்தின் முக்கிய பில்லராக நடித்திருந்தர்வர் அலேக்யா. வாழ்க்கையில் படும் இன்னல்களை வெளிச்சமாக திரையில் காட்டியிருந்தார். குளியறையில் உடைந்து அழும் காட்சியில் நம்மையும் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார் அலேக்யா.
படத்தின் முதல் பாதி எங்கோ சென்று கொண்டிருந்தாலும், கருக்கலைப்பு, குழந்தையின்மை என இரண்டு முக்கிய மூலக்கருவை இரண்டாம் பாதியில் கொண்டு வந்த இயக்குனருக்கு பெரும் பாராட்டுகள்.
இருந்தாலும், கதையை இன்னும் அழுத்தமாகவும் ஆழமான திரைக்கதையோடும் கூறியிருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தையும் எழ வைத்துவிட்டார் இயக்குனர்.
செளரப் அகர்வாலின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலுமே நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவு நச்..
படத்தொகுப்பு அளவாக கட் செய்திருக்கிறார்.
வில் – டச்





