Spotlightசினிமா

Gen Z தலைமுறையினரை வெகுவாக கவர்ந்த “With Love” !!

றிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான திரைப்படம் தான் “வித் லவ்”.

இத்திரைப்படம், வெளியான முதல் ஷோ’விலே பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதிலும், பெரும்பாலும் Gen Z தலைமுறையினர் இந்த படத்தினை வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த கால இளைய தலைமுறையினர் அனைவரும் கொண்டாடும் விதத்தில் படத்தினை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் மதன்.

அதுமட்டுமல்லாமல், ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பதால், இவரின் இசையை கேட்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கின்றனர்.

படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். நேற்று கிடைத்த பாசிடிவான விமர்சனத்தால், திரையரங்கு டிக்கெட் புக்கிங் அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது “வித் லவ்” படத்திற்கு…

இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், அரங்குகளை வித் லவ் ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button