Spotlightசினிமா

மூன்று மொழிகளில் வெளியாகும் யோகிபாபுவின் படம்!

தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மொழிகளில் சாட்டிலைட் வழியாகவும் OTT இணையத்தின் மூலமும் யோகி பாபு நடித்த ‘தர்மபிரபு’ வெளியாகிறது.

இப்படம் தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழிகளில் மொழிமாற்றுப் படமாக உருவாகியுள்ளது.

கொரோனாவின் லாக்டவுன் காலத்தில் சாட்டிலைட் வழியாகவும் OTT மூலமும் வெளியிடப்படவுள்ளது.

தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் P ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம் மூன்று மொழிகளிலும் இம்மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்துள்ளது.

தெலுங்கில் வசனங்கள் , பாடல்களை எழுதி இருப்பவர் அட்ஷத் .கன்னடத்தில் வசனங்களுடன் பாடல்களையும் உமா எழுதியுள்ளார்.மலையாளத்தில் வசனம் பாடல்களை நிஷாத் எழுதியுள்ளார்.

எமனாக யோகிபாபு நடிக்க , எமனின் அப்பாவாக ராஜேந்திர பிரசாத் , சித்திரகுப்தனாக கருணாகரன்,சிவனாக பிரம்மானந்தம் என நடித்திருக்கிறார்கள்.

இயக்கம் -முத்துக்குமரன், ஒளிப்பதிவு -மகேஷ் முத்துசாமி, இசை- ஜஸ்டின் பிரபாகரன்,
எடிட்டர்- சான் லோகேஷ்

Facebook Comments

Related Articles

Back to top button