
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 20 ஆம் தேதி வெளியானது ‘ஒத்த செருப்பு’. பல பிரபலங்களால் இப்படம் பாராட்டப்பட்டாலும், திரையரங்குகளில் கூட்டம் என்னமோ அவ்வளவாக இல்லை. இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில் கூட்டம் வரவில்லை என்று படத்தை திரையரங்குகளில் இருந்து எடுத்துவிட வேண்டாம். இன்னும் ஒரு வாரம் காத்திருங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டனர். இதைப் பார்த்து கோபமடைந்த பார்த்திபன், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும்,பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு! Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது.’ என்று கூறியுள்ளார்.





