
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: பிரசாந்த் ராமன்
தயாரிப்பு – TURM புரொடக்ஷன் ஹவுஸ் S. உமா மகேஸ்வரி
ஒளிப்பதிவு – சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த்.
இசை – ராக்கேஷ் அம்பிகாபதி
எடிட்டிங் – R. K. ஸ்ரீநாத்
நடிகர், நடிகைகள் : லிங்கா, சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன்
கடனுக்கு கார் ஒன்றை வாங்கி, அதனை கேப்’ஆக பயன்படுத்திக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் லிங்கா. தான் உண்டு தனது வேலை உண்டு என எந்த ஒரு வம்பிற்கும் போகாமல் பழமாக வாழ்ந்து வருகிறார் லிங்கா. இவரது நண்பராக வருகிறார் ஸாரா.

ஏரியாவிற்குள் போதை பொருள் கடத்தலில் கிங்’ஆக திகழ்கிறார் சாய் தீனா. இந்தியாவில் மிகப்பெரும் டானாக இருக்கும் தாவுத்’தின் சரக்கை காலதாமதமாக கைமாற்றியதால், சாய்தீனாவிடம் போதை பொருள் கடத்தும் வேலையானது மற்றொரு கடத்தல் மன்னனான அபிஷேக்கிடம் கொடுக்கப்படுகிறது.
தன்னை நம்பி மிகப்பெரும் பொறுப்பை தாவுத் வழங்கியிருப்பதால், இந்த முதல் கடத்தல் வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் அபிஷேக்.
இந்த வேலையை கெடுக்க வேண்டும் என்று முனைப்பில் சாய் தீனா, போலீஸ் உயரதிகாரி ஒருவர், போதை பொருள் கடத்தல் பிரிவு, தாவுத்தின் எதிரி என பலரும் ஈடுபடுகின்றனர்.
இந்த சூழலில், இந்த கடத்தல் விவகாரத்தில் லிங்கா எப்படி உள்ளே வந்தார்.? அவருக்கும் இந்த கடத்தல் கும்பலுக்கும் என்ன சம்பந்தம்.?? யார் இந்த தாவுத்.??? உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகன் லிங்கா, படத்தின் இந்த கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மிகவும் அப்பாவியாக பால் வழியும் முகமாக கேரக்டரை உணர்ந்து அதை அளவாக நடித்து கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தனக்கான டிரான்ஸ்பர்மேஷனை கொடுக்கும் இடத்தில் அப்ளாஷ் வாங்குகிறார் லிங்கா. கடற்கரை ஓரத்தில் மாஸாக நிற்கும் காட்சி வேற லெவல் தான்.
ரவுடிகளாக நடித்த சாய் தீனா, அபிஷேக், சரத்ரவி உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கான கேரக்டரை மிக சிறப்பாக செய்து முடித்திருந்தனர். ஆனால், தோன்றும் இடங்களிலெல்லாம் புகை பிடித்துக் கொண்டிருப்பதை சற்று குறைத்திருக்கலாம்.
மாஸ் காட்சிகளுக்கான காட்சிகள் மிகக் கச்சிதமாக அனைவருக்கும் பொருந்தியிருந்தது. படத்தின் கதாநாயகியான சாரா ஆச்சர் அழகாக வந்து சென்றார். ஒரு சில காட்சிகளே மட்டுமே சாரா வந்து சென்றது படம் பார்க்கும் ரசிகர்களை இயக்குனர் ஏமாற்றமடைய வைத்துவிட்டார்.

சீனியர் நடிகரான ராதாரவி, வையாபுரி மற்றும் ஸாரா உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாகா செய்து முடித்திருக்கின்றனர்.
மிகப்பெரும் ஜாம்பவான்கள் அல்லது மிக உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் நடிக்க வேண்டிய கதையில் தனக்கேற்ற நடிகர்களை வைத்துக் கொண்டு மிகவும் மாஸான ஒரு படத்தைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராமன்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் மிகப்பெரும் பக்க பலமாக வந்து நிற்கிறது படத்தில்…
மாஸ் காட்சிகளுக்கான பின்னணி இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. எதிர்பாரா திருப்பம், அனல் பறக்கும் மாஸ் காட்சிகள் என படத்தினை நன்றாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இரத்தம் தெறிக்கா ஒரு மாஸ் கேங்க்ஸ்டர் படம் என்றால் அது இது தான்…
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம் இயக்குனரே..
தாவுத் – மாஸ் …





