Spotlightதமிழ்நாடு

குழந்தைக்கு 16 கோடி ரூபாயில் ஊசி; உணமைச் சம்பவம் படமாகிறதா.?

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோமிலா. இந்த தம்பதியினருக்கு ஜேசன் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் உள்ளது. இதற்காக ரூ.16 கோடி மதிப்பிலான தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வந்தனர்.

பல நடிகர், நடிகைகள், சமூக தொண்டு நிறுவனங்கள் பணம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், அமெரிக்க மருந்து நிறுவனம் குலுக்கல் முறையில் இந்த குழந்தைக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை சமீபத்தில் செலுத்தியது.

இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு, திரைப்படம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய் பீம் போல் ஒரு உண்மை சம்பவம் பற்றிய சர்சைகளை பேச வருகிறதா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது..

Facebook Comments

Related Articles

Back to top button