
கோவை: சரவணம்பட்டி அருகே அமைந்திருக்கிறது கரட்டுமேடு முருகன் கோவில். அந்த மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் தினமும் பக்தர்கள் மற்றும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இன்றும் அவ்வாறு சென்ற போது, அருகே இருக்கும் முட்புதர்களுக்கு மத்தியில் 3 வயது மதிக்கத் தக்க சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது.
காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டவுடன் விரைந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கே ஒரு இளைஞர் சுற்றித் திருந்ததாகவும், பின்பு அவரை யாரும் பார்க்கவில்லை என்றும் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
காரமடை பகுதியில் இருக்கும் வெள்ளியங்காட்டையைச் சேர்ந்தவர் ரூபினி. இவருடைய குழந்தை தேவிஸ்ரீ. அவருக்கு வயது என்ற 3. இவரின் தாயார், கரட்டுமேடு பகுதியில் தன் குழந்தையை காணவில்லை என்று தேடி வந்துள்ள நிலையில், இறந்து போன குழந்தையின் உடல் காட்டப்பட்டது.
அடையாளத்தை உறுதி செய்த அப்பெண், இறந்து போனது தன் குழந்தை தான் என்று கூறி கதறி அழுதுள்ளார். அந்த பெண், அந்த குழந்தை எப்படி இந்த பகுதிக்கு வந்தனர். குழந்தை எப்படி காணமால் போனது என்பது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





