நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தற்போது சக்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். இது தற்போது இறுதிகட்ட பணிகளில் உள்ளது.
தனது தயாரிப்பு நிறுவனமான ”விஷால் பிலிம் பேக்டரி” நிறுவனத்தில், ரூபாய் 45 லட்சம் கையாடல் செய்ததாக பெண் கணக்காளர் ரம்யா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய தொகை ரூ.45 லட்சத்தை, கையாடல் செய்ததாக விஷாலின் மேலாளர் ஹரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Facebook Comments