Spotlightசினிமா

“7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தும் திருமணம் ஆகவில்லை” – சோனா உருக்கம்

ஏன் கல்யாணம் ஆகல.. நடிகை சோனாவின் உருக்கமான பேச்சு…💔

தனக்கு திருமணம் ஆகாததை பற்றி நடிகை சோனா உருக்கமாக கூறியிருக்கிறார். அதில்,

கல்யாணம் பண்ண ஆசை தான் … ஆனா எதுவும் கை கூடி வரல.

ஒரு உறவில் கிடைக்கும் காயங்களைவிட, நம்பிக்கை உடையும் தருணங்கள் தான் அதிகம் வலிக்கும் 💔.

இந்த உறவில் உடல் ரீதியான அடியும் வாங்கியிருக்கேன். வெளியே நான் கொஞ்சம் டெரர் மாதிரி தெரிந்தாலும், வீட்டுக்குள் நான் ரொம்ப வீக்.

நான் அன்பை அளவில்லாமல் கொடுப்பேன். எனக்கு அளவு தெரியாது. காதல்னாலும் சரி, அக்கறைய்னாலும் சரி, முழுசா கொடுத்துடுவேன்.

அவர் என் வாழ்க்கைத் துணை என்று நினைத்துவிட்டால், என்னோட எதிர்காலத்தை பற்றி யோசிப்பதற்குப் பதிலா, அவரோட எதிர்காலத்தை பிளான் பண்ண ஆரம்பிச்சிடுவேன்.

எல்லாமே பண்ணிட்டு, கடைசில நீ ஒன்னுமே இல்லன்னு சொன்னா கூட பரவாயில்லை.

ஆனால், நீ ஒரு கிளாமர் ஆர்டிஸ்ட் தானே… எப்படியோ வந்திருப்பன்னு சொல்லும்போது தான் மனசு ரொம்ப வலிக்கும்.

ஏழு, ஏழரை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகும், ஒருநாள் போகணும்னு முடிவு பண்ணும்போது தான் அந்த கேள்விகள் எல்லாம் வரும்.

Facebook Comments

Related Articles

Back to top button