
தமிழ், மலையாளம், தெலுங்கு, கனடா, ஹிந்தி என ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் “4 கேர்ள்ஸ்”.
தெலுங்கான மாநிலத்தில் மருத்துவருக்கு நேர்ந்த உண்மை சம்பவத்தின் அடிப்படை கருவாக வைத்து உருவாகியுள்ள படம் ” 4 கேர்ள்ஸ்”.
ஸ்ருதிகா தன் தங்கையை படாத கஷ்டங்கள் பட்டு தன் தங்கையை மருத்துவருக்கு படிக்க வைக்கிறார். அவரை நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஸ்ருதிகா தன் தங்கையோடு படித்த மாணவிகளின் துணையோடு அவர்களை பழி வாங்குகிறார் என்பதே படத்தின் கதை என தயாரிப்பாளர் நரசிம்மலு தெரிவித்தார்.
சஸ்பென்ஸ், திரில்லராக உருவாகியுள்ள “4 கேர்ள்ஸ்” திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அடுத்த மாதம் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கதை நாயகன் நாயகிகளாக அங்கூர், பிரின்ஸ், சுருதிகா, மரியா, அக்ஷனா, பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை: ஜெயசந்திரா
ஒளிப்பதிவு: ஜெகதீஸ்
வசனம்: ரவிக்குமார்
கதை, திரைக்கதை, இயக்கம் – சிவா
யூனிக் பிக்சர்ஸ் சார்பாக நரசிம்மலு தயாரித்துள்ளார்.