Spotlightசினிமா

செல்வராகவன் தெரிவித்த ”புதுப்பேட்டை 2” படத்தின் அப்டேட்!!

 

பல வருடங்களுக்கு தனுஷ் நடிப்பில் உருவான “புதுப்பேட்டை” படத்தை இயக்கியிருந்தார் செல்வராகவன். அனைவரின் கவனத்தையும் திரும்ப பார்க்க வைத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் செல்வராகவன் இருந்து வருகிறார்.

தற்போது, சூர்யா நடிப்பில் `என்.ஜி.கே’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் இப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் புதுப்பேட்டை படத்தை மீண்டும் பார்த்தது பற்றி நடிகர் சந்தீப் கிஷன் ட்விட்டரில், “புதுப்பேட்டை படத்தை மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், மைன்ட் ப்லோயிங் அனுபவமாக இருக்கிறது” என ட்வீட் செய்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ரீட்வீட் செய்திருந்தார் செல்வராகவன்.

இதில் ரசிகர் ஒருவர், “சார் புதுப்பேட்டை ஒரு மாஸ்டர் பீஸ் படம். பார்ட் 2வுக்காக இப்போதும் காத்திருக்கிறேன்” எனக் கேட்க, அதற்கு செல்வராகவன் “நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும்” என பதிலளித்திருந்தார். புதுப்பேட்டை வெளியான நேரத்தில் பெரிதாக வரவேற்கப்படாததும் பின்னர் அதற்கென பெரிய ரசிகர் படையே உருவானதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button