
சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான “அழகிய தமிழ் மகன்“ reality show மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி, “அழகிய தமிழ் மகன்“ title winner ஆனார் சித்தார்த்.
தொடர்ந்து “என் பெயர் மீனாட்சி” தொடரில் கதாநாயகனாக நடித்து பல ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். ஆபீஸ் / office தொடரில் “கமல்“ ஆக மிகவும் இயல்பாக நடித்து தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சரவணன் மீனாட்சியில் மீனாட்சியின் அண்ணன் ”வைத்தி“ என்ற கதாபாத்திரத்தின் மூலம் வெற்றிகரமாக அமைதியாக தொடர்ந்தது சித்தார்த்தின் பயணம். அத்துடன் எத்தனையோ Reality shows ”Jodi number 1“, “Dance Jodi Dance”, என்னும் பல நடன நிகழ்ச்சிகளிலும் மற்றும் game shows, அச்சம் தவிர், Mr. & Mrs. கில்லாடிஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றியடைந்து தனது திறமைகளை வெளிக்காட்டினார்.
சித்தார்த்தின் நடன திறமை அபாரமானது என்று எத்தனையோ மேடைகளில் பிரபல நட்சத்திரங்களால் பாராட்டு பெற்றவர். இப்பொழுது தினம்தோறும் “ரெக்க கட்டி பறக்குது மனசு“ தொடரில் கதாநாயகனாக உலா வருகிறார். மிக விரைவில் வெள்ளித்திரையில் சித்தார்த் காலடி எடுத்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாழ்த்துகளோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் “தமிழ் வீதி” சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்..





