
சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்க சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் “சூரரைப் போற்று. கொரானா காலத்தில் இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது.
மிகப்பெரும் வெற்றியடைந்த இப்படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை சூர்யா தனது நிறுவனமான 2டி எண்டர்டெயின்மண்ட் சார்பில் தயாரித்திருந்தார்.
இப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் பெரும்பாலும் ஆவல் கொண்டிருந்தனர். மாறாக படம் ஓடிடி’யில் வெளியானது. ரசிகர்களின் கனவு கானல் நீராய் போனது.
தற்போது சூர்யா ரசிகர்கள் உற்சாகம் படும் விதமாக, சூரரைப் போற்று திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

ஆம், வரும் 4 ஆம் தேதி அநேக திரையரங்குகள் “சூரரைப் போற்று” படத்திற்கான டிக்கெட்களை ஆன்லைனில் ஓபன் செய்துள்ளனர்.
இதனால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.





