
நடிகரும் இயக்குனருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விஷால். பிறகு ‘செல்லமே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அவர் தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக திகழ்ந்தார்.
பின் நடிகர் சங்க தேர்தலில் வென்று செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வென்று தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், விஷாலுக்கு பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை முடிவு செய்துள்ளனர். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஹைதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே திருமண தேதியையும் முடிவு செய்யவுள்ளனர்.
Facebook Comments





