Uncategorized

தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய தொகுதி தென் சென்னை.. வெற்றி யாருக்கு..?

2008-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி தென்சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டு புதிய மக்களவை தொகுதி அறிவிக்கப்பட்டது.

2009-ல் நடைபெற்ற தேர்தலில் திரு சி ராஜேந்திரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 42.38 விழுக்காடாகும்.

2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டாக்டர் ஜெயவர்தன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 4,34,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.34 விழுக்காடாகும்.

1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட திரு ஆர் வெங்கட்ராமன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றியதுடன் பின்னர் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் (1910-2009) பணியாற்றினார்.

தற்போது இத்தொகுதியில் சொந்த தொகுதிக்காரர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.

தொகுதி வேட்பாளர் குறித்த ஒரு சர்வேயில்;

தென் சென்னை தொகுதி மக்களிடம் எந்த கெட்ட பெயரும் வாங்காமல் நல்ல திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள இளம் வேட்பாளரும் அடிப்படையில் மருத்துவருமான Dr. ஜெ.ஜெயவர்தன் M.P அவர்களுக்கா? அல்லது தொகுதிக்கு அறிமுகமே இல்லாத திமுகவின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கள ஆய்வு செய்யும் நிபுணரிடம் சென்னையின் ஸ்டார் தொகுதியான தென்சென்னை பற்றி கேட்டபோது. தென்சென்னையில் இம்முறை தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இரண்டு மாபெரும் தலைவர்களும் இல்லாமல் தமிழகத்தின் பிரதான இருபெரும் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

தென் சென்னையை பொறுத்தவரை நன்கு அறிமுகமான டாக்டர். ஜெ ஜெயவர்தனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும், திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் போதுமான அறிமுகமும் இல்லாததால் அவர் தோல்வியடைவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button