Spotlightசினிமா

பொள்ளாச்சி சம்பவத்தை அம்பலப்படுத்துகிறதா அதர்வாவின் ‘100’..??

 

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு நடிக்க உருவாகியுள்ளது ‘100’. இப்படத்தினை ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் மகேஷ் தயாரித்துள்ளார்.

படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மகேஷ் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை போன்று இப்படத்திலும் பெண்களின் பாதுகாப்பற்ற சூழலால் ஏற்படும் அவலத்தை வெளிக்காட்ட வருகிறது.

பெண்களுக்கு சமூகத்தில் என்ன மாதிரியான அவலங்கள் நடந்து வருகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.

படத்தின் டிரெய்லர் அனைவராலும் பாராட்டப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாக இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button