Spotlightசினிமா

விஜய் சேதுபதியின் ’சிந்துபாத்’ படத்தை கைப்பற்றிய ’க்ளாப் போர்ட்’ நிறுவனம்!

விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி நடிக்க உருவாகி வருகிறது ‘சிந்துபாத்’. இப்படத்தினை பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படத்தினை இயக்கிய அருண்குமார் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு வெளியானது. இது மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. கே ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவீஸ் நிறுவனம் இரண்டும் சேர்ந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

தற்போது, இப்படத்தினை ’க்ளாப் போர்ட்’ நிறுவனம் சார்பில் சத்யமூர்த்தி தமிழகம் முழுவதும் வெளியீடும் உரிமையை பெற்றுள்ளார்.

இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button