
துரை செந்தில்குமாரின் ‘பட்டாஸ்’ படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் தனுஷ்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இப்படத்தினையும் கலைப்புலி எஸ் தாணுவே தயாரிக்கவிருக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு ‘கர்ணன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தலைப்பு ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் படத்திற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால், மீண்டும் இவர்களுக்கு இந்த டைட்டில் கிடைக்குமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கவிருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டிற்கு தள்ளிச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
காலம் கடந்தாலும் கைகொடுப்பாரா இந்த ‘கர்ணன்’ என்று ஏங்கி கொண்டிருக்கிறார் இயக்குனர்..





