
பிகில் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு ‘மாஸ்டர்’ என்ற டைட்டில் வைத்துள்ளனர்.
XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், புதியதோர் சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது.
ஆம், ‘மாஸ்டர்’ என்ற டைட்டிலை, ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் கில்டு நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன்பே பதிவு செய்துள்ளதாம்.
தற்போது, அந்நிறுவனம், ‘மாஸ்டர்’ டைட்டில் எங்களுக்கு தான் சொந்தம் என்று கில்டு நிறுவனத்தில் புகார் கொடுத்துள்ளதாம்.
இதை அறிந்த ‘XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் குழப்பத்தில் ஆந்துள்ளதாம். டைட்டிலை பதிந்து வைத்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையையும் துவக்கியுள்ளார்களாம்…





