
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் கொத்து கொத்தாக மக்கள் மரணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து தொடர்ந்து பல மாநிலங்களில் நாளுக்கு நாள் பலர் மரணமடைந்து வருகின்றனர்.
மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே கதியாய் இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் சிலர் செய்யும் வேலைகள் பலரது முகம் சுழிக்கும் வண்ணமாக இருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஸ்டார்களில் ஒருவர் தான் தனுஷ். இவரது பல படங்கள் ரசிகர்களால் மட்டுமல்ல மக்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், வருகிற ஜீலை மாதம் 28ஆம் தேதி தனுஷ் தன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
இதற்கு இன்னும் 94 நாட்கள் உள்ளது. ஆனால் தற்போதே தனுஷ் பிறந்தநாளை கொண்டாட கவுன் டவுனை தொடங்கிவிட்டனர் இவரது ரசிகர்கள்.
100 வது நாட்களில் இருந்து தொடங்கி 99, 98, 97, என்று தினசரி ஒரு ஹேஷ் டேக் கிரியேட் செய்தும் அதை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருவது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
ரசிகர்கள் தங்கள் தலைவன் பிறந்தநாளை கொண்டாடுவது அவர்களது தனிப்பட்ட உரிமை என்றானாலும், உலகமே இன்னல்களை சந்தித்து வரும் இவ்வேளையில் இந்த மாதிரியான வேலையில் ரசிகர்கள் இறங்குவது சரிதானா..?? அல்ல அந்த செயலை உங்கள் தலைவர் தான் ஏற்றுக் கொள்வாரா..??? என நடுநிலையான நெட்டிசன்கள் கேட்கின்றனர்.





