
சாருஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து படம்தான் ‘தாதா 87’. இப்படத்தை விஜய்ஸ்ரீ ஜி இயக்கியிருந்தார். இந்த படத்தில் லோக்கல் தாதாவாக களம் இறங்கி நடிப்பில்மிரட்டியிருந்தார்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா படத்தின் டீசரும் இப்படத்தின் டீசரும் ஒரே நாளில் வெளிவந்தது. இது உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. சாருஹாசனை வைத்து ஒரு முழு நீள கேங்க்ஸ்டர் படம் இயக்குங்கள் என்று இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி’க்கு பலரும் கேட்டுக் கொண்டனர்.
இதனால் மீண்டும் சாருஹாசனுடன் இணைந்து முழு நீள கேங்க்ஸ்டர் படத்தினை இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளிலும் இறங்கினார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.
கொரோனா ஊரடங்குக்கு முன்னர் ஒரு வாரம் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில்,
சாருஹாசன் அணிந்த ஆடையைக் கண்டு இது மதம் சம்பந்தப்பட்ட படம் என்றும் யூகிக்க முடிகிறது.
இப்படம் குறித்து இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி பேசுகையில், “தாதா 87 படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பினைத் தொடர்ந்து முழுநீள ”டான் சப்ஜெக்ட்” படத்தை இயக்கலாம் என்று முடிவு எடுத்தேன். இந்த படத்துலயும் சாருஹாசன் சார் உங்களை நிச்சயம் மிரட்டுவார். தற்போது 90 வயதிலேயும் உலக அளவில் நடிக்கிற நடிகர் இவர் மாட்டும்தான்.

நடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் சார், வயதில் உலக நாயகன் சாருஹாசன் சார் தான். இப்படத்தில் மைம்கோபி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு பிரபல நாயகனும் இப்படத்தில் நடிக்கிறார். அது சஸ்பென்ஸ்.
பழம்பெரும் நடிகர்கள் சிலரையும் நடிக்க வைக்கிறேன். கேரளா,கோவா போன்ற இடங்கள்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனா தடை நீக்கத்துக்காக எதிர்பார்த்துட்டு இருக்கோம்” என்றார் இயக்குனர்.
ஒளிப்பதிவை கோபி கவனித்துக்கொள்ள, தாதா87 இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டினே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தாதா87 டிசர் பின்னனி இசை பெரிய அளவில் பாரட்டபட்டது குறிப்பிடத்தக்கது விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சாருஹாசனின் இந்த கெட்-அப் மும்பை தாதாவாக வலம் வந்த பால் தாக்கரே போல் தோற்றம் உள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.




