
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கர்ணன்’.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ‘கண்டா வரச் சொல்லுங்க.. ‘ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதுவரை, சுமார் 11 மில்லியன் மக்களால் யூ-டியூப் தளத்தில் பார்க்கப்பட்டுள்ள்து. இந்த பாடலின் ஹிட்டால் அடுத்த பாடலின் மீது பெரும் எதிர்பார்ப்பை எதிர்பார்க்க வைத்துள்ளனர்.
பண்டாரத்தி புராணம் என தொடங்கும் அடுத்த பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்பட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





