
இயக்குனர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இனியா, ஹரி கிருஷ்ணா, சுப்ரமணியம் சிவா, மேற்கு தொடர்ச்சி மலை அந்தோணி என பலர் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “ரைட்டர்”.
இப்படம் வெளியான முதல் தொடர்ந்து நல்லதொரு விமர்சனங்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் எண்ணிடாத, ஒரு கதையை கையில் எடுத்ததற்காகவே இயக்குனர் ஃப்ராங்க்ளினை கொண்டாடலாம் என்று கூறிவருகின்றனர்.
காவல்துறையில் அதிகாரமற்ற காவலர்களின் இன்னல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியமைக்காக படக்குழுவினர்களுக்கு பெரும் நன்றிகளை கூறிக் கொள்ளலாம்.
தொடர்ந்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காவலர்களின் அதிகாரங்களை திமிறி வெளிக்காட்டி வந்த படங்களான விசாரணை, ஜெய் பீம் படங்களின் வரிசையில் ரைட்டர் படமும் இணைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தினை தயாரித்திருந்தது பா இரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நீலம் நிறுவனத்திற்கு மற்றுமொரு மகுடமாக சேர்ந்திருக்கிறது “ரைட்டர்”.





