
1980-90 களில் மிகவும் உட்சத்தில் இருந்தவர் நடிகர் மோகன். ரஜினி, கலம்ல் படங்களுக்கு இணையாக ஒரு நடிகர் பார்க்கப்பட்டார் என்றால் அது மோகன் தான். இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டது. இதனாலேயே இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.
இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால், அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகனாக ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மோகன்.
‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் புத்தாண்டில் வெளியானது. இந்த படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பூ இணைந்திருக்கிறாராம். 1980-90களில் மோகன் மற்றும் குஷ்பூ முன்னணி நட்சத்திரங்களாக இருந்த போதும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





