Spotlightசினிமா

காத்து வாங்கும் “ஹாஸ்டல்”; டிக்கெட் முன்பதிவில் மந்தம்!

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஹாஸ்டல்”.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கியது முதல் எந்தவொரு திரையரங்கிலும் டிக்கெட் புக்கிங்கில் வரவேற்பு இல்லாமல் “ஹாஸ்டல்” திரைப்படம் காத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான, பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 போன்ற படங்களில் திரையரங்கில் இன்னமும் நல்லபடியாக ஓடிக் கொண்டிருப்பதாலும், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்துள்ளதாலும் ஹாஸ்டல் மற்றும் அதோடு சேர்ந்து வெளிவரும் கதிர் என்ற படத்திற்கும் வரவேற்பு இல்லாமல் போயுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி நல்ல தொரு வரவேற்பை பெற்ற படம் “மன்மதலீலை”. இப்படத்தில் ஹீரோவாக நடித்த அசோக் செல்வனுக்கு நல்லதொரு பெயரும் கிடைத்தது.

ஹாஸ்டல் படத்திலும் ஹீரோவாக தோன்றியுள்ள அசோக் செல்வனுக்கு போதுமான வரவேற்பு இல்லாதது சற்று ஏமாற்றமே.

 

Facebook Comments

Related Articles

Back to top button