Spotlightவிமர்சனங்கள்

3BHK – Movie Review 2.75/5

இயக்கம்: ஸ்ரீ கணேஷ்

நடிகர்கள்: சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், யோகிபாபு, சாய்த்ரா

ஒளிப்பதிவு: Dinesh Krishnan B & Jithin Stanislaus

இசை: சாம் சி எஸ்

தயாரிப்பு: சாந்தி டாக்கீஸ்

கதைப்படி,

கணவன் மனைவியான சரத்குமார் – தேவயானி தம்பதிக்கு மகனாக சித்தார்த்தும் மகளாக மீதா ரகுநாத்தும் வருகிறார்கள்.

தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் சரத்குமார். தனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்துக் கொண்டு சென்னையில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார் சரத்குமார்.

சொந்தமாக தங்களுக்கென்று ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது வீட்டிலிருக்கும் அனைவரின் கனவாக இருக்கிறது. தான் சேமித்து வைத்த சிறிய பணத்தைக் கொண்டு வீடு பார்க்கும் படலத்தில் இறங்குகிறது சரத்குமாரின் குடும்பம்.

பள்ளியில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், கல்லூரியில் சேர அதிகப்படியான பணம் தேவைப்படுவதால் சேமிப்பு பணம் அனைத்தையும் கல்லூரிக்கு சென்று விடுகிறது. வீடு வாங்கும் கனவு இதில் உடைபடுகிறது.

தொடர்ந்து பணம் சேமிக்க சேமிக்க, அடுத்தடுத்த கமிட்மெண்ட், செலவினங்கள்படியால் சரத்குமாரின் சொந்த வீடு வாங்கும் கனவு கனவாகவே இருந்து வருகிறது. தன்னால் முடியாததை தனது மகன் செய்து முடிப்பான் என்ற நம்பிக்கைக்குச் சென்று விடுகிறார் சரத்குமார்.

அப்பாவின் கனவை மகன் சித்தார்த் நனவாக்கினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்தில், கம்பீரமாக அனைவராலும் பார்க்கப்பட்ட சரத்குமார், எதுவுமே இல்லாதது போல், அமைதியாக வாய் திறந்து பேசுவதற்குக் கூட பயந்து கொண்டு பேசும் ஒரு கதாபாத்திரமாக அவரை நம்மால் ஏற்க மனம் தயங்குகிறது.

அதன்பிறகு காட்சிகள் நகர நகர, அக்கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளும்படியான நடிப்பைக் கொடுத்து படம் பார்ப்பவர்களை அவருடன் பயணம் புரிய வைக்கும்படியான ஒரு நடிப்பைக் கொடுத்துவிட்டார் சரத்குமார்.

தனது நடிப்பின் திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் தேவயானிக்கு பெரிதான ஒரு இடம் கொடுக்காமல் இருந்தது பெரும் வருத்தம் தான். சரத்குமார் – தேவயானி இருவருக்குமான கணவன் – மனைவி பாண்டிங் காட்சிகளை சற்று வைத்திருந்திருக்கலாம்.. ஒரு சில காட்சிகள் இருந்தாலும், பெரிதாக கனெக்ட் ஆகாமல் சென்றுவிட்டது.

பள்ளி படிக்கும் போது ஒரு கெட்-அப், கல்லூரி படிக்கும் போது ஒரு கெட் அப், பின் வேலைக்குச் செல்லும் போது ஒரு கெட் அப், குடும்பஸ்தனாக ஆன பின்பு ஒரு கெட் அப் என படத்தில் தனது கேரக்டெருக்கென்று மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. தனது உழைப்பிற்கான பலனையும் சித்தார்த் பெற்றிருக்கிறார். “சாரிப்பா….” என்று ஒவ்வொரு முறையும் அவர் கூறும் போது மனம் கணக்கிறது.

தொடர்ந்து சித்தார்த்தின் தங்கையாக நடித்திருக்கிறார் மீதா ரகுநாத், தனது கேரக்டரை மிக அழகாக செய்து முடித்திருக்கிறார். அதிலும், தன் கணவனிடம் பட்ட இன்னல்களை விவரிக்கும் இடத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்து விட்டார்.

சித்தார்த்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த சாய்த்ரா, கனக்கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார். ஆடம்பரமில்லா கதாபாத்திரத்தை சரியாக செட்டில் செய்து நடித்திருக்கிறார்.

எதற்கும் உதவிடாத உறவுகள், அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கும் போது தடுக்கும் உறவுகள் என உறவுகள் ஒரு குடும்பத்தை எப்படி ஒடுக்குகிறது என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

வாடகை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இப்படம் ஒரு பிரதிபலிப்பாகவே தென்படும். அவர்களின் மனதில் இருக்கும் வேதனைகள், ரணங்களை இப்படம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

திரைக்கதையில் ஏற்பட்ட ஒரு ஸ்லோவை சற்று கவனித்திருந்திருக்கலாம்..

குடும்பத்திற்காக அனைத்தையும் விடுத்து, தனக்கு தன்னுடைய குடும்பம் மட்டுமே என்று சரத்குமார் நிற்கும் காட்சிகளில் கண்களில் ஈரம் வந்துவிடுகிறது.

சாம் சி எஸ்’ன் இசையில் ஓரிரு இடங்களில் அதிகப்படியான சத்தத்தைக் கொடுத்துவிட்டது. அதை சற்று குறைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

3BHK – வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் நிலைமை

Facebook Comments

Related Articles

Back to top button