
கணவன் மனைவியான வசந்த் ரவி மற்றும் மெஹ்ரின் ஒரு அபார்ட்மெண்டில் வாழ்ந்து வருகின்றனர். குடித்துவிட்டு போலீஸ் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய காரணத்தினால், சஸ்பென்ஷனில் இருக்கிறார் வசந்த்.
வெறுப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இருவரும். சஸ்பென்ஷன் காலம் முடிவடைந்தும் தன்னை இன்னும் பணிக்கு அழைக்கவில்லையே என்ற விரக்தியில் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறார் வசந்த். ஒருகட்டத்தில், தனது பார்வையை இழந்து விடுகிறார் வசந்த் ரவி. மனைவி மெஹ்ரினின் துணையோடு தனது அன்றாட பணியை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார் வசந்த் ரவி.
இதுஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சைக்கோ கில்லராக களம் இறங்குகிறார் சுனில். தன்னை ட்ரிக்கர் செய்பவர்களை தொடர்ச்சியாக கொலை செய்து வருகிறார் சுனில். அதுமட்டுமல்லாமல், அவர்களின் கையை துண்டாக வெட்டி, அவற்றை வீசி வருகிறார்.
வழக்கை விசாரிக்க களம் இறங்குகிறார் கல்யாண்.
இறுதியில், சுனில் போலீஸ் பிடியில் சிக்கினாரா.? இந்த கொலைகளுக்கும் வசந்த் ரவி – மெஹ்ரின் தம்பதிகளுக்கும் என்ன சம்பந்தம்.? இவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்ன.? உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகன் வசந்த் ரவி, இந்திரா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். முதல் காட்சியிலேயே படத்திற்குள் நுழைய வைத்து நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்துவிட்டனர். விரக்தியான வாழ்க்கை வாழும் இடமாக இருக்கட்டும், கண் தெரியாமல் தனது மனைவிக்காக ஓடும் ஓட்டமாக இருக்கட்டும் என பல இடங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

வில்லனாக நடித்த சுனில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லனாக தனது கேரக்டரை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.
மெஹ்ரினின் அழகு படத்திற்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. அழகாலும் நடிப்பாலும் நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளில் வந்த அனிகாவின் நடிப்பும் பாராட்ட வைத்தது.
படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.
நல்லதொரு கதையை கையில் எடுத்து அதை நன்றாகவே திரைக்கதை அமைத்து நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்துவிட்டார் இயக்குனர். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே படத்தின் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.

படத்தின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு பிஜிஎம்’ம் காட்சிகளை ஒருபடி மேலே தூக்கிச் சென்று விட்டது. ஒளிப்பதிவு புதியதொரு அத்தியாயம் படைத்துவிட்டது என்றே கூறலாம்.. படத்தின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரையிலும் அப்படியொரு மெனக்கெடலை ஒளிப்பதிவாளர் இப்படத்தில் கொடுத்திருக்கிறார்.
க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கலாமோ என்ற ஒரு சின்ன ஏக்கத்தை மட்டும் கொடுத்துவிட்டார் இயக்குனர்.
மற்றபடி,
இந்திரா ஒரு சீட் எட்ஜ் த்ரில்லர் திரைப்படம்
Actors: Vasanth Ravi , Sunil ,Mehreen Pirzada ,Anikha Surendran ,Kalyan Kumar ,RajKumar
Crew Details
Production House: JSM Movie Production, Emperor Entertainment
Producer: Jaffer Sadiq, Irfan Malik
Tamilnadu release – Trident Arts – R Ravindran
Written & Directed by: Sabarish Nanda
Director of Photography: Prabu Rhagav
Music & Original Score: Ajmal Tahseen
Editor: Praveen KL
Production Designer: Surya Rajeevan
Stunt: Vicky
Executive Producer: V. Madhusudhan
Promotions: Vasumathi (The RoadMap)
PRO: Sathish Kumar (S2 Media)





