Spotlightசினிமா

தாயும் மகனும் சிக்கும் மர்ம வீடு! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ (F6 Building Ivory Street). இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கேரளாவிலிருந்து திரைப்பட இயக்குநராகும் கனவுடன் தனது தாயுடன் சென்னைக்கு வரும் ஒருவர், புதிய வீட்டில் குடியேறுகிறார். அங்கு நிகழும் மர்மமான அமானுஷ்ய சம்பவங்களும், அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்களுமே படத்தின் மையக்கதை.

ஹாரர், திரில்லர் மட்டுமின்றி குடும்ப உணர்வுகள், காதல், நகைச்சுவை ஆகியவற்றையும் இணைத்து வித்தியாசமான திரை அனுபவமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அபய் சங்கர்.

இப்படத்தில் கலேஷ் ராமானந்த், ஷ்ரத்தா கோகுல் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை கலாரஞ்சினி கதாநாயகனின் தாயாக நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ திரைப்படத்தை ஜனவரி 2027-ல் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button