
தமிழ் சினிமாவில் பல படைப்பாளிகள் தங்கள் திறமைகளை தன்னகத்தே வைத்து, அதனை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமலும், வெளிக்கொண்டு வர சரியான பாதை இல்லாமல் இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு வழி ஒன்றை ஏற்படுத்துக் கொடுத்திருக்கிறது Hand pick records என்ற லேபிள் கம்பெனி. நண்பர்களான முஹம்மது சதத், ஆண்டனி வாங் மற்றும் நிஷாந்த் மோகன் தாஸ் மூவரும் இணைந்து Hand pick records என்ற கம்பெனியை தற்போது துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் பல தனி இசை பாடல்களை உருவாக்கும் வல்லவர்கள் தங்களது திறமைகளை இதன் வாயிலாக வெளிக் கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது.
இந்நிறுவனத்தின் முதல் படைப்பாக சக்தி இயக்கத்தில் ரேனிகுண்டா பட புகழ் நிஷாந்த் நடிப்பில் ”ஆகாய கங்கை” என்ற பாடல் வெளியிடப்பட்டது.
பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இந்த பாடலை எழுதியுள்ளார். நிவின் ரவீந்திரன் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். தேவு மேத்யூ மற்றும் வசந்த் சந்திரசேகர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
இவ்விழாவில், நடன இயக்குநர் ஷெரீப், ராஜேந்திர பிரசாத், விஜய் டிவி பிரபலங்கள் சுனிதா, ரேஷ்மா , செய்தி வாசிப்பாளர் சுஜாதா, நடிகர் ஜானி மற்றும் பலர் கலந்து கொண்டு படைப்பாளிகள் அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
தொடர்ச்சியாக பேசிய Hand pick records நிறுவன உரிமையாளர்கள், ஆகாய கங்கை படைப்பைப் போல இன்னும் பல படைப்புகளை கொடுத்துக் கொண்டே இருப்போம் என்று கூறினர்.





