தமிழ்நாடு

மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா!

சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ் இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று அதனை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்ட அன்றும் தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர் கொள்ள தயங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், RK செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர் ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பி கொண்டிருந்த போட்டோவை வைத்து தனது டுவீட்டர் பக்கத்தில் இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம் என கிண்டல் செய்து உள்ளார் அதற்கு பதிலளித்த சௌந்தர்ராஜா,
ராஜா சார் இந்த போட்டோ ஜல்லிக்கட்டிற்காக மெரினா கடற்கரையில் குழந்தைகளையும் பெண்களையும் அடிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டபோது எடுக்கப்பட்டது என்றும் எங்களுக்கு வன்முறை வேண்டாமென்று அமைதியாக உள்ளோம் திரும்ப அடிக்க தெரியாமல் அல்ல என்றார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button