தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடி போராட்டம்!

 

சென்னை: ராணுவ கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கறுப்புக் கொடி, மோடி வருகைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

மோடி வருகைக்காக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கைது செய்யும் முன் ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்எல்ஏ தமிம் அன்சாரி மற்றும் வாழ்வுரிமை கட்சித் தொண்டர்கள் பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button