Spotlightசினிமா

அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய அருண் விஜய்… திரை அரங்குகளை ஆக்கிரமித்த “ரெட்ட தல”!!

கிறிஸ் திருகுமரன் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் ரெட்ட தல..

இரட்டை கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டியிருந்த அருண் விஜய், இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை மிரட்டலாக கொடுத்திருந்தார்.

இரண்டு வேடத்திற்குமே நல்லதொரு மாற்றத்தைக் கொடுத்திருந்தார் அருண் விஜய். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை படம் ஆரம்பிக்கும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் கொடுத்துக் கொண்டே நகர்த்திச் சென்றிருந்தார் இயக்குனர் கிறிஸ் திருகுமரன்.

க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கட்ட ட்விஸ்ட் காட்சிகளெல்லாம் யாரும் எதிர்பாராத ஒன்று என்று படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், படத்தின் சண்டைக் காட்சிகளுக்கென்றே படத்தினை ரிப்பீட் மோட்’ல் திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

தொடர்ந்து திரையிட்ட திரையரங்குகளிலெல்லாம் ரெட்ட தல திரைப்படம், அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button